நீதிதேவன் மயக்கம்
நீதி.......
வீதிகளில் தான் விளம்பரம்.
வாங்குவதற்கு
எல்லோருமே தயாராகிறோம்
கொடுப்பதற்குத்தான் தயாராய் இல்லை
எடைக்கற்கள் எதுவுமின்றி
தொங்கிக்கொண்டே இருக்கிறது
தராசு ...
கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதையின்
நெற்றியை நிமிர்ந்துபார்த்தபடி...!!
நிஜத்திற்க்கே சாட்சி தேடும்
சத்தியவான்கள் சபை
சத்தியமாய் எல்லோரும் பேசலாம்
ஆனால் சத்தியம்
சிலநேரம் பேசப்படுவதேயில்லை .....!!!
சுத்தியலின் சுதிமங்கிப்போனதால்
அரிவாள்கள் அதிர்ந்துபேச
ஆரம்பித்துவிட்டன
உரக்க சிரிக்கவும்,....
உதிரம் தெறிக்கவும்!!!!
மரங்களை வெட்டிதீர்த்த கொடும்வாளுக்கு
கோரப்பசி தீராமல்
வெட்டிகொண்டிருக்கின்றது
கிளைகளைப்போலவே
மனிதர்களையும் .......!!!
திருத்தப்படலாம் தீர்ப்புகள்
ஆனால்
எழுதப்படுவதே இல்லை
பிறர் எண்ணும்படிஎல்லாம்
நீதி தாமதமாகும்போது
முந்திக்கொள்கின்றன தண்டனைகள்.....
தலைமுறையின்
தண்ட கணக்குகளை
தீர்த்து கொள்ள /கொல்ல.....!!!
கவிதாயினி நிலாபாரதி —