வெற்றி பெற வேண்டுமா-அரவிந்த் C

நாம் கடந்து போகும் பாதையில்
சோகமும் வரலாம்
சந்தோசமும் வரலாம்
இரண்டிலும் வாழ்ந்திட பழகிடு...!

மனமே, சோகங்கள்
உன்னை பக்குவப்படுத்தும்,
சந்தோஷம்
இன்னும் பெற ஊக்கப்படுத்தும்...!

தோல்விக்கு
பயந்து
முயற்சிக்க மறுக்காதே...!

அகன்று விரிந்த இப்புவியில்
நீ நடக்கும் தடங்கள்
தொலைந்து போய் விட கூடாது
பதிக்கப்பட வேண்டும்...!

இருளை போக்கி
வெளிச்சம் தர
ஒரு தீக்குச்சி
இறந்தே ஆக வேண்டும்...!

அது போல் தான் வாழ்க்கை
வெற்றியை அடைய
சில தோல்விகளை
சந்தித்தே ஆக வேண்டும்...!

சோகத்திலும்
சிரிக்க கற்றுக்கொள்
சந்தோசத்திலும்
அமைதி காக்க கற்றுக்கொள்...!

வாழ்க்கையின்
கரடுமுரடுகளில்
நெளிந்து வளைந்து
பயணிக்க கற்றுக்கொள்...!

தோல்வியை ருசித்து
வெற்றியை புசித்தால்
வரலாறு
உன் பெயர் சொல்லும்...!

தோல்வியை வெறுத்து
வெற்றியை நேசித்தால்
உன் நிழலும்
உன்னை நெருங்காது...!!!

எழுதியவர் : அரவிந்த் .C (17-Jul-14, 4:08 pm)
பார்வை : 398

மேலே