நான் கவிஞனா அல்ல கிறுக்கனா- அரவிந்த் C

இலக்கணம்
துணை கொண்டு,
எழுதுவது தான்
கவியோ...?

இலக்கணம்
துணை இல்லாததால்
நான் கவிஞன்
இல்லையோ ...?

வெள்ளை காகிதத்தில் தலைப்பிட்டு
நான் எழுதிய வரிகள்
வெறும் கிறுக்கல்களாகவே
மாறிவிடுமோ...?

அங்கிகாரம்
ஏதும் கிடைக்காமல்
என் கவிதைகள்
நின்றாலும்,

என்னுள் ஃபீனிக்ஸ் பறவையாய்
மீண்டும்
சிறகடித்துக்கொண்டே இருக்கிறது
என் கவிதை சிறகுகள்...!

கடல்நீரை
பருகினாலும்
தணியாத தாகம் கொண்டேன்
கவிதையின் மேல்...!

இசையின்
ஏழு சுவரங்கள்
போல தான்
கவிதையும் நானும்...

என் வார்த்தைகளை
வீணையாகி
வாசித்துக்கொண்டே இருக்கிறேன்
என் வாழ்வில்...

இலக்கணங்கள்
கற்று தர
யாரும் இல்லை
என்னிடம்...

இச்சமுகத்தில்
நான் ரசித்த வெறுத்த நிகழ்வுகளுக்கு
என் வார்த்தைகளில்
வடிவங்கள் தர நினைத்தேன்...

இலக்கண துணை இன்றி
என் இதயம் மட்டும்
துணை கொண்டே
எழுதுகிறேன் நான்...

என்றோ ஒரு நாள்
என் கிறுக்கல்களும்
கவிதையாய்
அங்கிகாரம் பெறும்...

இந்த கிறுக்கனும்
கவிஞன் ஆவான்
என்ற நம்பிக்கையில்
வாழ்க்கையின் வழியில்
என் கிறுக்கல்களுடன்
காத்துக்கிடக்கும் கிறுக்கன் நான்..

நான் கவிஞனா அல்ல கிறுக்கனா....???

எழுதியவர் : அரவிந்த் .C (17-Jul-14, 5:14 pm)
பார்வை : 288

மேலே