மீண்டும்்்♥்்மீண்டும்♥அவன்

பேருந்தில் மிதமான கூட்டம் இருந்தது. திடீரென ஒரு சத்தம்.“பளார்.”பளார் என்ற அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் கன்னத்தில்கை வைத்தபடி நின்றிருந்தான்.அறைந்தது அவளாகத்தான்இருக்கவேண்டும்.நானும் ஒரு வாரமாக கவனித்துக்கொண்டு தான்இருக்கிறேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் ஏறுவான்.அவளுக்கு பின்னால் போய் நின்றுகொள்வான்.இதுவரை அவன் ஒரு நாள்கூட டிக்கெட் எடுத்ததில்லை.அவனுக்கு பதினெட்டு வயதிருக்கவேண்டும். ஒரு கசங்கியசட்டை அணிந்திருந்தான். அழுக்கான ஜீன்ஸும் செம்பட்டை தலையும்ஒரு பிக்பாக்கெட்டை நினைவுபடுத்தியது.முகத்தில் வயது கோளாறை பிரதிபலிக்கும் பருக்கள்.அவளுக்கு நாற்பது வயதுக்குள் தான் இருக்கும். சுமாரான அழகு.அவளிடமிருந்து அடி வாங்கிய பிறகு என்ன செய்வதென்று தெரியாமல்நின்றுகொண்டிருந்தான். அதற்குள்இன்னொரு புண்ணியவதி எழுந்து..."என்னபாத்துட்டு இருக்கீங்க....புடிச்சு வெளிய தள்ளுங்க...பொம்புளைங்களஉரசரதுக்குன்னே வர்றானுங்க....”என்றபடி அவனை நோக்கி பாய்ந்தாள்.அவன் தலை குனிந்துகொண்டான். அவன் முகத்தில் அவமானம். இந்தகாரியத்தை செய்தது அவனல்ல. அவனுடைய வயது. இந்த வயதின்பலவீனத்தை என்னை போல் ஒரு சைக்காலிஜிஸ்ட் தான்தெரிந்து வைத்திருக்க முடியும். எனக்கு அவன் தோள் மேல்கை போட்டு அவனுடன் அன்பாக ஆதரவாக பேசவேண்டும் போல் இருந்தது.தாய்ப்பால் குடிக்கிற போது தோன்றாத காமம் கன்ட்ராவி எல்லாம் இந்தஇரண்டாங்கெட்டான் வயதில் தான் தோன்றுகிறது. சரியானபுத்தி மதியும் குடும்ப சூழலும் இல்லாமல் மனதின்இழு சக்திக்கு பலி ஆகும் வாலிபர்கள் எத்தனை பேர். எனக்கு தெரியும்.அந்த பெண்ணின் கோபத்துக்கு ஒருஞாயம் இருப்பது போல் இவனுடையதாபத்துக்கும் ஒரு ஞாயம் இருக்கும்."என்ன சார் பாத்துட்டு இருக்கீங்க.காது மேலரெண்டு போட்டு அடிச்சு வெளிய தள்ளுங்க"என்று அந்த அதிவீரபெண்மணி தொடர்ந்து ஆண்களை உசுப்பி விட்டபடியே இருந்தாள்.நல்ல வேளையாக, பத்து பேர் சேர்ந்து கும்பலாகஒருவனை அடிக்கிறபோது அதில் பதினொன்றாக தன்னையும்சேர்த்துக்கொண்டு தங்கள் வீரத்தை நினைவுபடுத்திக்கொள்ளும்கோழை ஆண்கள் யாரும் அந்த பேருந்தில் இல்லை. யாரும் அவனை அடிக்கதயாராய் இல்லை. நடத்துனர் விசில் ஊதினார். பேருந்து நடுவழியில்நின்றது. அவன் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்கவில்லை.தலை குனிந்தபடி கன்னத்தை தடவிக்கொண்டே நடக்க மட்டுமே வரம் பெற்றஒரு சவம் போல் அந்த பேருந்தை விட்டு கீழே இறங்கினான்.அனைவரும்அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அது அவன் மேல் கொண்டமரியாதையினாலோ பயத்தினாலோ அல்ல சாக்கடை தண்ணீர் நம் மேல்தெறித்துவிடாமல்ஒதுங்கிக்கொள்கிற எச்சரிக்கை. நான்அவனையே இரக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த துள்ளல்அதிவீர பெண்மணி ஜன்னல் வழியாக கை வீசி ஏதோ ஆவேசமாகஅவனை திட்டிக்கொண்டிருந்தாள். துப்பவும் செய்தாள்.அறை கொடுத்தவள் மௌனமாக நின்றிருந்தாள்.அவள் தான் செய்தகாரியத்துக்காய்வருத்தப்பட்டிருக்கலாம்.ஒரு வாரம் கழித்து மீண்டும் அவனை பார்க்க நேர்ந்தது.இப்போது ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போது. பாப்கார்ன்வாங்கி ஒவ்வொன்றாக வாய்க்குள் எறிந்துகொண்டிருந்தேன்.அப்போது மேனேஜர் அறையிலிருந்து அவனை இரண்டு போலீஸ்காரர்கள்காளரை பிடித்து இழுத்துக்கொண்டுவந்தார்கள். ஐந்தாறு பேர் பின்தொடர்ந்து வந்தார்கள். போலீஸ்காரர் "ஸ்டேஷனுக்கு வந்து கம்பிளைன்ட்கொடுங்க" என்றார். மேனேஜர் அரை அடிக்கு குனிந்து போலீஸ்காரரிடம்..."சார் கம்பிளைன்ட் வேண்டாம் சார். தியேட்டர் பேரு கெட்டுடும்.சும்மா விசாரிச்சு மிரட்டி அனுப்பிடுங்க " என்றார். போலீஸ்காரர்கள்எப்படி விசாரிப்பார்கள்எப்படிமிரட்டுவார்கள் என்று எனக்கு தெரியும்.ஒரு பலி ஆட்டை போல் அவன் நின்றுகொண்டிருந்தான். எல்லோர்பார்வையும் அவன் மேல் படிந்திருந்தது.என் அருகில் இரண்டு சிறுமிகள்நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மற்றவளை பார்த்து"திருடன்...திருடன்...எப்படி இருக்கான் பாரேன்.பாக்கவே பயமா இல்ல....அதான் போலீஸ் புடிச்சிட்டு போகுது" என்றாள்.எனக்கு இப்போதும் அவன் மேல் பரிதாபம் இருந்தது.என்னை பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அல்ல. நோயாளி. அவன்தண்டிக்கப்படவேண்டியவன் அல்ல. குணப்படுத்தப்படவேண்டியவன்.அவனுக்கு தேவை போலீஸ்காரர்களின் லட்டி அடியும் பூட்ஸ் மிதியும்அல்ல. அன்பான அரவணைப்பான வைத்தியம்.கூட்டத்தில் இன்னொருவர்"என் ஒயிப் வந்து கம்பிளைன்ட் கொடுக்க முடியாது சார். ஷீ இஸ் எசென்ட்ரல் கவர்மென்ட் எம்பிளாயி. டீசன்ட் பேமிலி சார். நீங்க இவனஇப்படியே விட்டுட்டா கூட கவலை இல்ல. ஆனா கம்பிளைன்ட் வேண்டாம்சார்." என்று மன்றாடினார்.“சரி விடுங்க. கம்பிளைன்ட் எல்லாம் வேண்டாம். இந்த பொறுக்கிய நாங்கபாத்துக்கறோம்”என்று போலீஸ்காரர் எல்லார் முன்னிலையிலும் அவன் கன்னத்தில் "பளார்"என்று அறைந்தார். அந்த பளாரின் அதிர்ச்சியில் அருகிலிருந்தஇரண்டு பெண்களுக்கு கைகள் உதறுவதை கவனித்தேன். உதறலில்பாப்கானில் இரண்டும் சில துளி கொக்ககோலாவும் தரையில்சிந்தியது. அந்த பெண்கள் அதற்கு மேல் காத்திராமல் தியேட்டருக்குள்ஓடினார்கள்.இப்போது போலீஸ் அவனை இழுத்துக்கொண்டுகீழே போனது. கூட்டம்கலைய தொடங்கியது. சிலர் மட்டும் என்ன நடந்தது என மேனேஜரிடம்விசாரித்தார்கள்.அவர் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை.அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். இப்போது தான் அந்தபெண்மணியை கவனித்தேன். அவள் தான். பேருந்தில் அந்தபையனை கன்னத்தில் அறைந்தவள். மீண்டும்அவளையே தொடர்ந்து வந்து தொந்தரவு செய்திருக்கிறான். தியேட்டர்இருட்டில். அவள் மெல்ல நடந்து வந்து கணவன் அருகில் நின்றுகொண்டாள்எல்லோர் பார்வையும் அவள் மேல் நிலைபெற்றிருந்தது....."படம் வேண்டாங்க....வீட்டுக்கு போலாம்.... எல்லாரும்ஒரு மாதிரி பாக்குறாங்க...."என்றாள். அவர்கள் இருவரும்கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து தியேட்டரின்கேட்டை தாண்டி போகும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.மீண்டும் இரண்டு வாரம் கழித்துஅவனை சந்தித்தேன்.இப்போது அதே பேருந்தில். அந்த பெண்மணியின் அருகில் தான் அவன்நின்றிருந்தான்.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. திடீரெனபேருந்தில் செக்கிங் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராகடிக்கெட்டை எடுத்து காட்டிக்கொண்டிருந்தோம். பரிசோதகர் அவனிடம்வந்தார்.“டிக்கெட் எடு.”அவன் மௌனமாய் இருந்தான்.“டிக்கெட் எடுக்கலையா....எங்கேயிருந்து வற கீழே இறங்கு....”அவன் முதுகை பிடித்து பரிசோதகர் தள்ளினார்.எல்லோரும் அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தோம்.அப்போது அந்த பெண்மணி பேசினாள்.“சார்...அவன் ஊம சார்.....அவனுக்கும் சேத்து நானே டிக்கெட்எடுத்துட்டேன். இதா சார்.”என்று ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் நீட்டினாள். அவர்டிக்கெட்டின்மேல் ஒரு டிக் அடித்து அவனுடைய கையில் திணித்தார். அவன்கவனமில்லாமல் அதை வாங்கி தன் சட்டை பையில் போட்டுக்கொண்டான்.பேருந்து புறப்பட்டது.இரண்டு வாரம் கழித்து மீண்டும்அவனை சந்தித்தேன். மெரினா பீச்சில்.கடலுக்கு மிக அருகில் கடலை பார்த்தபடி நின்றிருந்தான்.நான்அவனிடமிருந்து இருபதடி தூரத்தில் அமர்ந்திருந்தேன். திடீரென அவன்கையிலிருந்து ஏதோ ஒன்று தவறியது. காற்றில் அது பறக்கத்தொடங்கியது.அவன் அதை பின் தொடர்ந்து வந்தான். ஒரு இடத்தில் கீழே விழுந்தது.குனிந்து எடுப்பதற்குள் அது மீண்டும் பறந்தது. காற்றில் பறக்கும் அந்தகாகிதத்தை, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அந்த காகிதம் என் அருகில்என்காலடியில் விழுந்தது. அதை நான் எடுத்தேன்.அவன்என்னை நோக்கி இப்போது ஓடி வந்துகொண்டிருந்தான்.அந்த காகிதத்தை பார்த்தேன். அது ஒரு பேருந்து பயணச்சீட்டு.அதன் பின்புறத்தில் குட்டி எழுத்துக்களால் இவ்வளவும் எழுதியிருந்தது.“உன்னை குப்பை தொட்டியில் எறிந்த நான் பாவி. என் சுயநலத்துக்காகஉன்னை அனாதை ஆக்கிவிட்டேன். என்னை மன்னித்துவிடு.தயவு செய்து என்னை பின் தொடராதே. என் கணவருக்கு நீ வந்தபாவவாசல் தெரியாது. என்றும் உன் நினைவோடு உன் அம்மா.”அவன் அந்த காகிதத்தை என் கையிலிருந்து கவனமாகவாங்கி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் அந்தபேருந்தில் வருவதில்லை.

எழுதியவர் : சதீஷ் (17-Jul-14, 8:21 pm)
பார்வை : 258

மேலே