ஐம்புலனுந் தாங்கற் கரிதாக லான் - ஆசாரக் கோவை 65
ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனுந்
தாங்கற் கரிதாக லான். 65 ஆசாரக் கோவை
பொருளுரை:
ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்.
ஆதலால், அறிவால் மிகுந்தோர் தம்முடைய தாயுடனும்,
மகளுடனும், உடன் பிறந்தவளுடனும் தனிமையாக
தங்காதிருக்க வேண்டும் எனப்படுகிறது.
கருத்துரை: ஐம்புலன்களையும் அடக்கி நடப்பது
அருமையாதலின் தாய், மகள், சகோதரி
முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது.
’உரையற்க’ என்ற பாடங்கொண்டு மேற்குறித்தவர்களுடன்
தனித்திருந்து உரையாடாது இருக்க எனவும் சொல்லப்படுகிறது.