மொழி பெயர்ப்பு போட்டி - கவிதை மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு போட்டிக்கான பரிசு பெற்ற கவிதை மொழி பெயர்ப்பு : மூலக் கவிதை தமிழில் கீழே தரப்பட்டுள்ளது .

SWING BACK , O , NIGHTINGALE

Ambitions and aspirations heaped on the wings,
Soaring high in the sky, heavenward bound,
Swing back, O, Nightingale, to quench your thirst,
Drinking the blazing rains of the blistering clouds!

Self esteem and honor, savored as food and soul,
Shamelessly forgotten, yielding to temptations.
Bring back, O, Nightingale, the glory of the golden past,
With the power to change their oscillating hearts!

The labor and toil of the laymen and poor
Effortlessly swallowed by the ever greedy autocracy.
Find out, O, Nightingale, a powerful weapon
To break the strong arms and reclaim their fateful lives!

Motherhood was hailed as the universal Truth
Proclaimed by THE TURBANED POET and our wise ancestors.
Come back, O, Nightingale, with your sweet melodies,
Tuning in the rich culture of fragrant Tamil traditions !


மீண்டும் வானம்பாடி -சிவா நாதன்
************************************************

கூண்டோடு உறங்காத உணர்வையெல்லாம்
குவித்து உந்தன் சிறகதனில் சுமந்து வானில்
நீண்டோடும் அனல்முகில் பறித்துத் தாகம் தீர
நெருப்புமழை பருகிட வா மீண்டும் வானம்பாடி

மானம் எனும் பானையிலே வாழ்வை ஆக்கும்
மறத் தமிழர் வாழ்ந்த கதை மறந்து நாளும்
ஊனமுற்ற உணர்வுடனே அலையும் மாந்தர்
உள்ளமதை மாற்றிட வா மீண்டும் வானம் பாடி

எளியவர்கள் ஏதிலிகள் வலியை உண்டு
ஏப்பம் விடும் ஏகாதிபத்தியத்தின்
வலிய கையை உடைத்தெறிந்து விறகாய் மாற்றும்
வழியறிந்து விதியை வெல்வாய் மீண்டும் வானம் பாடி

முண்டாசுக் கவிஞனும் நம்முன்னோரும் சொன்ன
மூவுலகின் சக்தியாம் தாய்க்குலப் பெருமை போற்றி
வண்டாடும் தமிழ் வனத்தின் வாசம் நீங்கா -இசை
பண்பாட இறங்கி நீ வா மீண்டும் வானம்பாடிB

எழுதியவர் : நாதாமாரா (19-Jul-14, 1:29 pm)
பார்வை : 137

மேலே