அழகின் உயிர்ப்பு

உன்னைத் தீண்டி
சிலிர்ப்புடன் சிரித்துப்போகிறது
காற்று.!

நீ பேசுகையில்
மௌனம் ஏங்குகிறது..
உன் அதரங்களால்
அதிகமுறை
என்னையும் பேசமாட்டாயா..!!

எல்லாப்பூக்களும்
ஒற்றைக்கால் தவம்தான்
இரட்டை கால்கொண்ட
உன்கூந்தலில் நின்றாட...!!!


எல்லாவற்றுக்கும் சேர்த்து
ஒற்றை வரமாய் வந்துவிடு
வானமும் மேகமுமாய் .....

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (19-Jul-14, 7:37 pm)
பார்வை : 86

மேலே