plan B , மாற்று திட்டம் வேண்டும்

ஜூலை 1 2014

கடுமையான மிருக சண்டை.
அன்று இரவு தொலைக்காட்சியில் பார்த்தேன்.
சுவிச்சர்லாந்து , எதிராக அர்ஜென்டீனா.

கால்பந்தாட்டம் .

45 நிமிடங்களுக்கு பிறகு முதல் பாதி ஆட்ட நிலை , 0-0.

0-0 தான் 90 நிமிடங்களுக்கு பிறகும் . இழுபறி தொடர்ந்தது .

பின்னர் கூடுதல் நேரம் தொடங்கியது.

மேட்ச் முழுவதும் அர்ஜென்டின வீரர்கள் கோலுக்கு முயற்சி செய்ய அதை தடுப்பதுதான் சுவிஸ் வீரர்களின் வேலை . வேலையாக அல்ல . எல்லை பாதிகாப்பு வீரர்கள் கடமை போல் ஆற்றினர் . எதிரியின் ஊடுறுவலை தடுத்தனர் . தடுத்தனர் . தடுத்தபடியே இருந்தனர் .

அவர்களின் ( சுவிஸ் வீரர்கள் )நோக்கம் பந்தயத்தை பெனால்டி shoot அவுட் கொண்டு போகவேண்டும் . அவ்வளவே .
ஏனெனில் பெனால்டியில் எவரேனும் வெல்லலாம் .அது ஒரு லாட்டரி போல.

அர்ஜென்டினாவின் கடவுள் "லியோனல் மெஸ்ஸி" அது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் .இந்த நூற்றான்டின
மிகச்சிறந்த கால்பந்தாட்ட காரன் .ஆனால் அந்த கடவுளின் ( angel ) தேவதூதன் "டி மரியா " .அவன் பேரே Angel di Maria தான் .

தேவதூதன் பந்தை லாவகமாக கடவுளிடம் pass செய்வான் .கடவுள் கோல் அடிப்பார் .இதுதான் அர்ஜென்டினாவின் தொடர்கதை.
எல்லா பந்தயங்களிலும் ...

இந்த பந்தயத்திலும
மேலும்
கூடுதல் நேரத்திலும அவர்கள் அதே கதையையாத்தான் தொடர்ந்தனர்.ஆனால் ஏனோ கதை எடுபடவில்லை இம்முறை .

திடீரென்று 119 வது நிமிடம் திட்டம் மாற்றப்பட்டது (120 நிமிடங்கள் மொத்த விளையாட்டு )

கடவுள் பந்தை லாவகமாக தேவதூதனுக்கு pass செய்தார் . தேவதூதன் கோல் அடித்தான் .
( மெஸ்ஸி மிக சாதுர்யமாக , துல்லியமாக பந்தை டி மரியா விடம் அடித்தான் . டி மரியா அதை சுலபமாக கோல் போட்டான்)

Score 1-0 ஆனது.

கால் இறுதியில் அர்ஜென்டீனா நுழைந்தது .

Moral of the story : வெற்றி கிட்டாத போது கடவுள் கூட திட்டங்களை மாற்றுகிறார் . (He too changes the plan ) . நாமும் கடவுள் வழி நடப்போம்.திட்டங்கள் பயனளிக்காத போது மாற்றுதிட்டங்கள வைத்திருப்பவன்தான் ஜெயிப்பான்.

அன்புடன் / ராம்வசந்த்

Sent from my iPhone

எழுதியவர் : ரம்வசந்த் (19-Jul-14, 11:56 pm)
சேர்த்தது : ராம் மூர்த்தி
பார்வை : 78

மேலே