கன்னியர் அன்னமே

தன்னை மணந்தவன்
தயாளன் என்பவர்!
என்ன குறைகள்
அவனிடம் இருந்தும்
நன்மைகள் கண்டும்
நம்பியும் வாழ்பவர்!
அன்னவன் பரத்தை
அனுபவம் மறப்பர்!
ஆகையால் தானோ
அன்னப் பறவைகள்
கன்னியர் என்றனர்!?
== == == ==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (21-Jul-14, 8:37 am)
பார்வை : 68

மேலே