நன்றி சொல்லிக்கொள்கிறேன்
காலம் கடந்து வாழும் நினைப்பில்
கவிதைகள் பதிகின்றேன்!
கண்ணில் தெரியாத் தளத்தில் நின்று
குயிலாய்க் கூவுகிறேன்!
சீலம் காட்டி வாழ்ந்தவர் தம்மைச்
சிந்தனை செய்கின்றேன்!
சென்று வடிந்து காலக் கடலில்
சேர்,நதி யாகின்றேன்!
பாலம் எனவே பழைமையைக் கொண்டு
புதுமையைப் பாடுகின்றேன்!
பாவம் எனவே கர்த்தரும் எனையே
படைத்ததில் நாணுகின்றேன்!
== == == ==
'நீ' விருப்ப முற்றதால் நிறுத்திவைக்க முடியாமல்
காவிரியில் தண்ணீர்,உன் கருணைபோல் வருகிறதே!
பூவிரியச் செழிப்புற்றுப் புதுப்பயிர்கள் தாம்வந்து
யாவருமே நலம்பெறட்டும் ! யான்,உனக்கு நன்றிசொல்வேன்!
== == == ==