மலர் நிலவு ஆடை அன்னம்

மலர்வதெல்லாம்
பூக்கள்தான்
வாச மலர்கள்
எத்தனை ?

கனவுகளெல்லாம்
இனிமைதான்
நனவாவது
எத்தனை ?

விரும்புவதெல்லாம்
காதல்தான்
சத்தியம் ஆனது
எத்தனை ?

வாழ்வெல்லாம்
உறவுகள்தான்
அர்த்தமுள்ள உறவுகள்
எத்தனை ?

எழுதுவதெல்லாம்
கவிதைதான்
காலத்தை வெல்பவை
எத்தனை ?

வானமெல்லாம்
நீலம்தான்
வளர்ந்தாலும் தேய்ந்தாலும் வாழ்வது
நிலவு ஒன்றுதான் !

வீதியெல்லாம்
ஊர்வலம் கூக்குரல்தான்
உண்மையேந்தி செல்பவை
எத்தனை ?

மேடையெல்லாம்
அரசியல் உறுதி மொழிகள்தான்
ஆடை அன்னமின்றி இருப்பவர்கள்
எத்தனை ?

விடிவதெல்லாம்
காலைதான் கவிதைதான்
விடியாத இரவுகளுடன் வாழ்பவர்கள்
எத்தனை எத்தனை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Jul-14, 8:57 am)
பார்வை : 121

மேலே