பெண்கள் நாட்டின் கண்கள்
பூப்போல மென்மையும்
பொன் போல் உடலும்
தங்கமான குணமும்
களங்கமில்லா நெஞ்சமும்
கொண்டவள் தான் பெண் ,
பணிவான பழக்கமும்
பக்குவமான செயல்களும்
பரந்த மனப்பாங்கும்
கூடிவரும் நாணமும்
வரவேற்கும் இங்கிதமும்
கொண்டவள் தான் பெண்
தேடி வரும் செல்வம் எல்லாம்
கூடி வரும் அவளாலே
அன்னையின் வடிவமும்
அவளிடம் காண வரும்
ஆசையுள்ள மனைவியாய்
அவனுக்குள் சக்தியாய்
கொண்டவள் தான் பெண்
நம்பி உன்னை நாடியவன்
நலம் காத்து குலம் காத்து
நான்கு வகை குணங்கள் கொண்டு
நாடும் உந்தன் கொள்கைகளில்
நற்செயலே உள்ளதென நல்லவர்கள்
போற்றிடவே நலன்களும்
கொண்டவள் தான் பெண்
இத்தகைய பெண்கள் தான்
நம் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள்
எண் சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்
அதற்கும் மேல் கண்களே பிரதானம்
அதனாலதான் பெண்களை
நாட்டின் கண்களுக்கு ஒப்பிடுவர்