இரக்கம்

இரக்கம் இயல்பாய் கொள்ளும் பட்சத்தில்
அரக்கன் குணம் அகம் புகா!

இரக்கம் இனியதாய் ஆக்கும் இதயம்
இருப்பதின் உண்மையை உயர்த்தும்!

இரக்கம் இல்லாத வாழ்க்கை
கலகம் நிறைந்த கலங்கம்!

காசுக்கு மாயும் உலகில் நம்
உயிர் மூச்சுக்கு வேணும் இரக்கம்!

வறியோர் நிலை கோரும் இரக்கம்
வலியோரின் மன தர்மம்! மகோன்னதம்!

இறக்கும் வாழ்வில் இரக்கம் கொண்டே
இருக்கும் நிலையில் இனிமை காண்போம்!

எழுதியவர் : கானல் நீர் (21-Jul-14, 9:03 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 1671

மேலே