எஞ்சியிரு
கால் வயிறு
சோறின்றி
மழைக்காக
காலமெல்லாம் காற்றிருந்து
கடன் பல
நீ வாங்கி
ஊர் பசிக்கு
சோறு போட
பணவெறி பிடித்தவனிடம்
அடிபட்டு மிதிபட்டு
அடிமை விலைக்கு
விலைபோகி
கூறுபோடும்
நிலத்தரகர்களிடம்
கூத்தாடி
தன்னிலம் காக்க
தன் மானம் இழந்து
பல தருணங்களில்
பாய்ச்ச நீரில்லாமல்
பசி தாளாமல்
பட்டினி சாவு கண்டு
தன் நலம் கருதாமல்
தன் வாழ்வு துறந்த
நீ கடவுள்
நீர் இன்றி அமையாது உலகு
நீ இன்றி உயிர் வாழாது உலகு
பிறர் கை கூப்பி
வணங்க மறந்த
உண்மை கடவுள் நீ
உன்னை ஒரு நாளில்
இந்த உலகம் வந்தடையும்
அதுவரையிலேனும்
நீ எஞ்சியிரு
உழவர் இனமே!!!!!!