ஐஸ்கிரீம் தின கவிதை
20-7-2014 ஐஸ்கிரீம் தினம்
பிறர் சுகத்திற்காக
உருகும் பனிப்பொருளே
உமிழ் நீருடன் கலந்து
இறைப்பைக்குள் இறங்கி
நெஞ்சை குளிர செய்தாய்
உனை ருசிப்பதற்கு முன்
நா எச்சில் குளமானது
நீ உருகுவதர்க்குமுன்
உருகினேன் உனை கண்டு
குழந்தை முதல் குமரி வரை
அனைவரும் உனக்கு அடிமை
நீயோ ஜலதோஸதிர்க்கு அடிமை
கோடை காலத்தில் மலர
குளிர் காலத்தில் உறங்குகிறாய்
அடம் பிடிக்கும் குழந்தையும்
அடக்கும் ஆற்றல் உணக்குண்டு
தொண்டை கட்டினாலும்
தொடாமல் விடமாட்டார் சிலர்
பந்தியிலே நீ கடைக்கோடி
பரவசத்தில் நீ முதலிடம்
நீ இல்லாமல் விருந்தில்லை
விருந்துக்கு பின் நாவை விட்டு
நீ எளிதில் மறைந்ததில்லை
உலகமக்களின் சந்தோசத்திற்காக
நீ உருகுகிறாய்
குழந்தைக்காக தாய்
தன்னை உருகி கொள்வாள்
நீ தாய்க்கு நிகரானவன்