ேபய்வீடு
இந்த பேய் வீட்டை வாங்குற நீங்கபெரிய தைரியசாலிதான் சார்,இருந்தும் உங்களுக்கு லாபம் தான்,இந்த ஏரியாவில 50 லட்சம் விலை போறகிரவுண்ட் உங்களுக்கு வீட்டோட15க்கு வந்துடுச்சு, " என தன் கமிஷன்தொகை குறைந்துவிட்டதைதலையைசொறிந்தபடி சுட்டிக்காட்டியவீட்டு புரோக்கருக்கு 5000 ரூபாய்எக்ஸ்ட்ராவாகக்கொடுத்துவிட்டு , நான்வாங்கிய வீட்டிற்கு அடுத்த வீட்டைத்தட்டினேன். கதவைத் திறந்த நடுத்தரவயது ஆசாமியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.“கேள்விப்பட்டேன் சார், நீங்க அந்தவீட்டை வாங்கிட்டிங்கன்னு, கிட்டத்தட்ட 4வருஷமா பூட்டிக்கிடக்கு, அந்தபொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டபின்ன குடி வந்தவங்களும் தினமும் நைட் 11மணிக்கு மேல புல்லாங்குழல் சத்தம்வீட்டிலகேக்குதுன்னு பயந்து காலி பண்ணிட்டு போயிட்டாங்க,““ம்ம்ம்" அவர்சொன்னதற்கு தலையாட்டினேன்.“உங்களுக்கு பேய் பிசாசு மேல எல்லாம்நம்பிக்கை உண்டா?”“இல்லை சார்“ மனசு தான் பேய், எதுக்கும் நீங்கஃபேமிலியோட குடிவரமுன்னாடி ஒரு பூஜை பண்ணிடுங்க, பேய்வீடுங்கிற நெருடல் உள்ளுக்குள்இருந்தாலும் உங்களுக்கு போயிடும்... நீங்ககுடும்பஸ்தரா?, ”“இல்லை சார், எனக்கு இன்னும்கல்யாணமாகல" அவர் வீட்டில்கொடுத்த காபியை நாசுக்காகமறுத்துவிட்டு நான் புதிதாய் வாங்கியவீட்டிற்கு ஒரு சிலதட்டுமுட்டு சாமான்களுடன்வேலையாட்கள் சுத்தம்செய்து முடித்தவுடன் உள்ளே நுழைந்தேன்.“சார், இந்த புல்லாங்குழல்கொல்லப் பக்கம் கிடந்தது"என்று சுத்தம் செய்ய வந்திருந்தஆட்களில் ஒருவன் என்னிடம்கொண்டு வந்து கொடுத்தான்.அதை சிரித்துக்கொண்டே வாங்கி அலமாரியில்வைத்து,வேலையாட்களை அனுப்பிவிட்டுகட்டிலில்கண்ணயர்ந்தேன். மனது நிறைந்திருந்தது.ஆம் இது என் கல்லூரிக்காதலி ஜெனி வாழ்ந்த வீடு இது...ம்ஹூம் ... இன்னும் வாழ்கிறாள்இங்குதான்.. எனக்காக...மற்றவர்களுக்கு அவள்எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.எனக்கு அவள் இன்னும் ஜீவனுள்ளஅதே பழைய ஜெனிதான்... கல்லூரியில்அவள் வழக்கமாக வாசிக்கும்புல்லாங்குழல் இசை மெலிதாக என்காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.