பேரின்ப விளைச்சல் ==கொச்சகக் கலி
அருவிக் கரைமேல் அமர்ந்த மரம்கொண்ட கிளையில்
குருவி இருக்கும் குடிசை அதில்கொட்டும் மழையின்
கருவி இசைக்கும் கவின்பா தனில்வந்து இழையும்
சுருதி பிசகா சுவையில் பேரின்பம் விளையும்!

