வெண்டுறை

பனித்துளியில் முகங்கழுவும் பலவண்ணப் பூக்களுக்கும் கர்வம் இல்லை
கனிகொடுக்கும் மரங்களுமே கதைதையாய் அதைசொல்லி மகிழ்வதில்லை
தனித்துவமாய் கிளையமர்ந்து இசைக்கின்ற பறவைக்கும் போதையில்லை
மனிதனுக்கு இவைஅனைத்தும் மலைபோலே முடிவுமில்லை.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Jul-14, 4:32 am)
பார்வை : 91

மேலே