தூக்கிட்டு தொங்குகிறது என் மரணம்

ஊசி இலைக்
காடுகளில்
குற்றுயிராய்
ஓடுவது,
ரத்தமற்ற
என் ஆறு....

தேடும் ஆத்திரத்தில்
அகம் தொலைத்த
அடி மாடாய்
கூழாங்கல் ஒன்றாய்
என் சிந்தனை....

சிற்றின்ப பெருவிழாவில்
சிதறிய தேகம்
கொண்ட
என் பறவையை கற்பழிக்கும்
என் வானம்....

காலடி ஓசைகளின்
குருட்டு கொலுசொலி
தீவிரம் வளர்க்கும்
செவிகளில்
ஊமையான என் காலம்
கல்லறை தோண்டும்....

வீரம் எனப்படுவது
மண்டியிட்டு
காதல் சொல்வதாய்
பாழாய் போகிறது
என்
ஒரே ஒரு பார்வை....

திருப்பி பார்க்கையில்
திரும்பி பார்க்கும்
திருட்டுப் பூனைகள்
வளர்க்கும்
உன் முன்னழகில்
தூக்கிட்டு தொங்குகிறது
என் மரணம்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (22-Jul-14, 8:59 pm)
பார்வை : 169

மேலே