நாற்றின் ஏமாற்றம்

கீற்றுகளின் மெல்லிய கூற்று
தென்றல் காற்று
நாற்றுகளில் சொல்லியது நேற்று
பதர் வெளியேற்று

காற்றின் தயவில் தூற்றிக்கொள்ள
நாற்றும் நினைத்து
நெல்லை மெல்லக் கூட்டிக்கொண்டு
காற்றில் நின்றது

கதிரின் பாரம் காற்றை எதிர்க்க
எதிரில் விழுந்தது
பதரும் நாற்றும் காற்றைக்கண்டு
பதறிப் போனது

பதரை விரட்ட எண்ணிய நாற்று
தோற்றுப் போனது
தன்னில் விளைந்த கதிரும் நாற்றை
விட்டுப் போனது

உன்னில் உருவான எல்லாமுந்தன்
நண்பன் இல்லை
நீயாய் நினைக்கும் எல்லாமுந்தன்
எதிரியும் இல்லை

எழுதியவர் : மது மதி (23-Jul-14, 2:58 am)
சேர்த்தது : mathumathi
பார்வை : 113

மேலே