ட்விஸ்ட்டு புதையல் கதை

ஒரு ஊரில ஒரு வீடு. அந்த வீட்டுல அமாநிஷ்ய ஷக்தி நடமாடுவதாக ஊரில் ஒரு நம்பிக்கை . தைரியமாக ஒருவர் வீட்டுக்குள்ள ஆராயபோனாறு அனால் அவரு திரும்பி வரவே இல்ல. அவர் இறந்துவிட்டார் என்ற அடையாளங்கள் கூட இல்ல. இப்படி ஐந்து பேர் போனாங்க அவர்களின் நிலைமையும் அப்படிதான் . பிறகு ஊரில் உள்ள எல்லாரும் சேர்ந்து அந்த வீட்ட உடைக்க தீர்மானம் பண்ணினார்கள். அனால் பழங்காலத்து அரசர் வாழ்ந்த கட்டிடம் என்ற படியால் அதனை உடைக்க அரசு மறுத்தது. புதை பொருள் ஆராய்ச்சிக்கு அதனை அரசு ஒப்படைத்தது. பின்பு அரசாங்கத்தால் பலர் ஓன்று கூடி அதனை ஆராய்சிக்கு உட்படுத்தினார்கள். அதில் சில விடயங்கள் மர்மமாகவே இருந்தது .
*************************************************************************************************************
ஒரு நாள் காலை அந்த காணாமல் போன ஐந்து பெரும் போலீசில் சிறை கூண்டில் அடைக்கப்பட்டிருந்தார்கள். நடந்தது என்ன என்று விசாரிக்க. பிறகு உண்மை அம்பலமானது.( புதையல் தேடும் முயற்சியில் அந்த ஐந்து பெரும் பேய் நாடகம் ஒன்றை நடித்து ஒவ்வோர் பின் ஒவ்வொறாக விட்டுக்குள் நுழைந்தால் ! அந்த காலத்து ராஜாக்களின் தரை கீழ் குகை வழியாக சென்று அந்தப்புரம் என்று அழைக்கப்படும் நீரருவிகள் கொண்ட ஒரு தோட்டத்தை அடைகிறது. அந்த தோட்டத்தின் நடுவே பூக்களால் அலங்கரித்த, கற்களால் செதுக்கிய கட்டிலும் , தங்கத்தினால் நிர்வாண கோலத்தில் வடிவமைக்கப்பட்ட சிலைகளும் நிறைந்து கிடந்தன.

அந்த சிலைகளுக்கு நடுவே மிக அழகான சிலை ஒன்று இருந்தது . கைகள் உயர்த்திய நிலையில் மார்பகங்கள் நீண்ட நிலையில் இருந்தது. அதை தொட்டவுடன் 6 கதவுகள் எமை சுற்றும் திறந்தன. மும்மூன்று தட்டுகளைகொண்ட அந்த சுவர் அலுமாரியில் முத்துக்களும் நகைகளும் கொட்டிகிடந்தன . இவைகளை நாம் ஐந்து பெரும் முறைப்படிய வந்து .எல்லாவற்றையும் ஓன்று சேர்த்து . வந்த பாதையினால் கொண்டு செல்லுவோம் என்று முடிவு செய்தவுடன்) ,

"இல்லை எனக்கு ஒரு பாதை தெரியும் " என்று வேறு ஒரு குகை வலிப்பாதையெய் இந்த புதையல் விபரம் தெரிந்த
நண்பன் தெரிவு செய்தான் . ..............

நாமும் அவ்வழியிலே சென்றோம் . அக்குகை வழி ஊரின் நடுவில் உள்ள பாழடைந்த கோயிலுக்கு அருகாமில் இருக்கும் தண்ணீர் வற்றிய கிணற்றில் முடிந்தது. பின் கிணற்றின் படிகளினால் ஏறியவுடன் புதையலை மறைத்து வைக்க அருகே இருந்த இருண்ட கோயிலின் ஒரு அறை ஒன்றை தேர்ந்தெடுத்தோம் . எல்லாப் புதையல்களையும் அவ்விடத்தில் விட்டுவிட்டு கொண்டு வந்த உணவு ,தண்ணீர் தீர்ந்து போனதால் ஐந்து பெரும் ஊருக்குள் வந்த பின்னர் துரதிஷ்ட வசமாக போலிசுக்கு மாட்டினோம்.........."

பிறகு பொலிசாருடன் கோயிலுக்கு வந்து பார்த்தால் ! புதையலை காணவில்லை என்று பொலிசாருக்கு வாக்குமூலம் கொடுத்துக்கொண்டு இருந்தான் ஐவரில் ஒருவன்...........
****************************************************************************************************************
இத்தனையும்
பொலிசார் (கோயில் - குகைவழி - அந்தப்புரம் - பேய்வீடு ) எல்லாவற்றையும் தேடிபார்துவிட்டு சொன்னது உண்மை , கடைசியில் யாரோ புதையலை கடத்தி இருக்கிறார்கள் . என்பதாக கேஷ்சினை சரிபார்த்து அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை நீதி மன்றத்தினால் வழங்கும்படி செய்தார்கள்.

புதையலை யார் எடுத்திருப்பார்கள் ?????? புதையலுக்கு என்ன நடந்தது ?
இந்த சந்தேகம் வாசகர்களாகிய நீங்களும் கேட்பது புரிகிறது ....................!
****************************************************************************************************************
இங்க கதையில tuwistu என்னவென்றால் .அப்பிடியே
(கோயில் அறை- கோயில் மண்டபம் - கிணறு - குகை வழி) என்று - ரிவேர்ஸ் வந்தீகென்னா !!!!...........................

ஐந்து பெரும் எல்லாவற்றையும் ஓன்று சேர்த்து . வந்த பாதையினால் கொண்டு செல்லுவோம் என்று முடிவு செய்தவுடன் , "அதில் ஒருவன் நம்ம பிளேன் படி இந்த புதயல இப்போ எடுக்கிறது அவ்வளவு உசிதமில்லை. இதெல்லாம் கொண்டு போய் பேய் வீட்டின் ஒரு அறையில் சேமித்து வைப்போம் . நம்ம புதை பொருள் ஆராய்ச்சியில் இருக்கும் மற்ற பாட்நேர் கச்சிதமாக வேலைய முடித்து நமது பங்கை எமக்கு ஒப்படைப்பார் ."

நாம் இந்த கிணற்று வழிய சென்று எமது நாடகத்தை அரங்கேற்றம் பண்ணுவோம் . இதெல்லாம் மங்காத்தா பிளேன் என்று ஒனக்கு தெரியாதா ??? )
(முற்றும்) *********************************************************************************

ரிப்னாஸ் -
தென்னிலங்கை
திக்குவல்லை.

எழுதியவர் : ரிப்னாஸ் திக்குவல்லை (23-Jul-14, 3:22 pm)
சேர்த்தது : ரிப்னாஸ் அஹ்மத்
பார்வை : 533

மேலே