ஆவணப்படுத்தப்பட்ட ஆறா வடு

தவறினைத் தவறென
ஒத்துக் கொள்வதில்
தவறேதும் இல்லையெனினும்
அனர்த்தங்களின் ஆறாவடுக்கள்
ஒட்டியிருக்கும் இம்மண்ணில்
விழுந்தாலவை நம்மையும்
ஒட்டிக்கொள்ளு மென்பது
அனைவரும் அறிந்ததே.
கீழே விழுந்தாலும் மீசையில்
மண் ஒட்டவில்லையென்பது
ஆண்களைப் பற்றிய
ஆவணக் கருத்தென்றும்
அல்ல அல்ல ஆணவம்
பற்றிய ஆகச்சிறந்த
ஆய்வுரையென்றும் சொல்லியபோது
ஆவணமோ, ஆணவமோ
ஆணவனை அவலப்படுத்துதல்
மட்டுமேயிவர் குறியென்றேன்
இருபொருட்பட பேசினாலும்
அர்த்தம் அனர்த்தமானாலும்
அவள்கொடுத்த சொல்லடி
ஆறாவடுவாய் நிலைக்கிறது
மீசை நிறைந்த என்முகத்தினிலே

எழுதியவர் : .தா. ஜோ ஜூலியஸ் (23-Jul-14, 5:39 pm)
பார்வை : 111

மேலே