உலகத்தின் அழைப்பு
நன்று செய்திடின் நன்மை குழைவார்
தீது செய்திடின் தீமை குழைவார்
என் நாளும் ஏதோ ஒன்று குழைந்திடும்
உலகத்தில் வாழ்கிறோமே நாம்
உலகம் உருண்டயானதென்பார்
நான் சொல்கிறேன் நம் வீட்டைச்
சுற்றி இருக்கும் மதில் சுவரை போன்றதென்று
கடந்தால் சுகம் தரும்
கிடந்தால் அருவருப்பு
உலகை கோபிப்போர் பலர் இருக்கையிலே
உலகை நேசிப்பவர்களும் பலர் இருக்கிறார் கள்
என்ற உடனே எனக்குள் ஓர் புத்தணர்வு
எனக்குள் ஓர் ஞாபக ஓட்டம்
ஒரு பொழுதும் சோராதே என் சகியே
உன்னை கோபுரத்தில் வைத்து புகழ் ந்தேன் நான்
உன்னை வானமாய் வைத்து புகழ் ந்தேன் நான்
உன்னை தடுக்கி விழுத்தும் கற்களை
ஒரு போதும் நினைத்ததில்லை
இரவில் வாங்கிய சுதந்திரக் காற்று
இன்னமும் விடியவில்லை எமக்கு
நடந்து செல்கிறோமே தூர த்திற்கு
எங்கு சென்று முடியுமோ இப்பாதை தெரியாது எமக்கு
இருப்பினும் உறவை வெறுத்து ஒதுக்கும்
உனக்காகவே என்றும் நான்
வாழ்வேன் என் சகியே
உன்னிடம் என் வாழ்வை முழுமையாய்
ஒப்படய்த்து விட்டேன்