இருவரி மந்திரம்

1998 . ஜனவரி 29 ...

வாழ்க்கை
வாடிப்போக
தோல்விகள்
தொடர்ந்து போக ...

ஆறாத வலிகளோடும்
அவமான வடுக்களோடும்
சென்னை துறந்தேன்.
ஐதராபாத் அடைந்தேன்.

எடுத்து வந்தது
இரண்டாயிரம்
(இரயிலில் டைரியில்)
எழுதியது இரண்டே வரி.

" நான் உங்களை ஜெயிப்பேன்.
200% ஜெயிப்பேன்.
ஒருவேளை தோற்றால்
என் கல்லறையில்
காறி துப்புங்கள் "

தொடர்ந்தது நாட்கள்...

தோற்ற போதும்
தோல்வி பயம்
தோன்றிய போதும்
டைரி எடுப்பேன்.
அவ்விரு வரி படிப்பேன்.

உக்கிரமாய்
பிடரி சிலர்க்கும்.
உதிரம் மொத்தம்
உழைக்க உந்தும்.

உழைத்தேன் .ஜெயித்தேன்.

இப்போதும் இகழ்பவர்
இருக்கத்தான் செய்கிறார்கள் .
போனவர் இடங்களில்
புதியவர் வருகிறார்கள் .

அவர்கரம் குலுக்கி
அகத்திலே உரைப்பேன்.
" அவ்விரு வரி இன்று
அவசியம் படிப்பேன் "

எழுதியவர் : ராம்வசந்த் (24-Jul-14, 8:33 pm)
Tanglish : iruvari manthiram
பார்வை : 115

மேலே