வாழ்க்கை

தூங்கும் நேரத்தை விட -நாம்
விழித்திருக்கும் பொழுதுதான்
அதிகம் ஏமாறுகிறோம்

சேமிக்க ஓடுபவனை விட
பாதுகாக்க நினைப்பவனே
நிம்மதி இழக்கிறான்

அனுபவத்தை மதிக்காதவன்
அனுபவித்த பிறகுதான்
அலைகளைகிறான்

மாற்றங்களை எதிர் கொண்டவன்
மற்றவர்களை மதிக்கிறான்

மூன்றேழுத்து மோகங்களில்
மூழ்கியவனும்- ஆசையும்
முடித்துவிடும் வாழ்வை

குறையோ நிறையோ
தேக உயிரில்
தாயின் அன்பாய்
துணையாய்- எதுவாயும்
தொடர்தால் இன்பம்

எழுதியவர் : sivani (24-Jul-14, 8:55 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : vaazhkkai
பார்வை : 118

மேலே