உருவமில்லாத சாவி

அனேக சலனமற்ற நகர்வும்
காற்றைப்போல்
என்
சங்கடங்களை தகர்த்தே
கடக்கையில்

சந்தேகமில்லா
நம்பிக்கையின் அணுக்கள்
சாத்தியங்களாய்
உயிர்பெற்றபடியே

தீர்ப்பில்லா
நீதியின் கண்கள்
என்
நியாயங்களுக்கு
வெளிச்சங்களாய்

ஒரு உருவமில்லாத
சாவி
திறந்து கொண்டேயிருக்கிறது
என்
பயணங்களை...

எழுதியவர் : சர்நா (26-Jul-14, 9:46 am)
Tanglish : uruvamillatha saavi
பார்வை : 106

மேலே