மீண்டும் பிரபஞ்சம் நோக்கி

என்னை
திறந்தவெளி பிரபஞ்சமாகச் சொல்லி
ஒவ்வொரு பூமியின் புள்ளியும்
நகர்த்தியதில்..

நாளாகிய பின்னும்
புரியாமல் திரிகிறேன்
இன்னொரு பூமியின் புள்ளியில்...

வரலாறுகள் வறண்ட
ஆறுகளாய் எனக்குள்
என்னுள் எரிந்துகொண்டிருக்கும்
என் வரலாறுக்கு
என்ன பதில் ???
எந்த பிரபஞ்சம்
அடங்குதிதில் ???

அதிசயக் கனவுகளின்
ஆட்குறைப்புகள்
இளித்துக்கொண்டிருக்கும்
பூமியில்

அத்தனையும் புறந்தள்ளி
அள்ளுகிறது என்
மொழியலைகள்
இன்னொரு வானமாய்
இதமளிக்கும் ஈரமாய்
சூளும் காற்றாகி
சுழன்றதில்
பெரு நகர்வு
என்னுள்
மீண்டும் பிரபஞ்சம் நோக்கி

எழுதியவர் : சர்நா (25-Jul-14, 11:13 pm)
பார்வை : 97

மேலே