ஆண்களென்ன ஜடங்களா

ஆண்களென்ன ஜடங்களா..??

ஆணெனப்பட்டவனே
அதற்குதான் - இது
இயற்கையின் அமைப்பு!
ஆணின் பாதிமூளையை
அதற்காகதான் - அது
கொடுத்திருக்கிறது!

அன்பைக்கொடுக்க
யாருக்கும் நேரமில்லை!
ஆபாசமூட்ட
ஆயிரம் வழிகளிங்கே!

தொலைக்காட்சியிலோ
அரைநிர்வான சீண்டல்கள்!
தொலைப்பேசியிலோ
பள்ளியறை படங்கள்!

உண்ணும் உணவிலோ
இரசாயனக் கலப்பு - அது
ஊட்டுவதோ உணர்ச்சிவேகம்!
சாப்பிடும் எதிலும்
வேதிப்பொருள் கலப்பு - அது
கலக்கும் மதியிலோ மோகம்!

காண்பதெல்லாம் காமம்!
பார்ப்பதெல்லாம் விரசம்!
காளைகள் கட்டியா கிடக்கின்றன?
பாயும்நேரம் பார்த்தல்லவா தவிக்கின்றன!

ஆயிரம் கட்டுப்பாடுகள்
ஒழுங்காக வாழ்வதற்கு!
ஆயிரத்திற்குமேல் வழிகள்
ஒழுக்கமின்றி அலைவதற்கு!

உணர்ச்சியை தீனிபோட்டு
வளர்த்து விடுகிறீர்கள்!
காட்டவழியின்றி துடிக்குதுதேகம்!
உணர்வற்று காத்துக்கிடந்தாலும்
வெடித்துவிடுகிறது வீதியில்
விதிவிளையாடும் சிலநேரங்களில்!

அலைபாயும் மனதை
அடக்க வழியுமில்லை!
விலைபோக இங்கே
வழிகளும் வேறில்லை!

விளையாட்டை ஊக்குவிக்க
ஒருவரும் முன்னிற்பதில்லை!
வேலைகொடுத்து வழிகாட்ட
எந்த ஏற்பாடுமில்லை!
மோகபானங்கள் விற்று
அரசு ஆதாயந்தேடும்!

படிப்பும் ஏறவில்லை!
வேலையும் ஒன்றுமில்லை!
அலைகழிப்பும் விரக்தியும்
ஆற்றாமையும் மனதை அமுக்கும்!

இணையமும் உலகவலையும்
எவ்வளவோ காட்டிடும்
இன்ப சரசங்களை
கண்முன்னே விரித்திடும்!

சேரும்கூட்டு சகலமும் பேசும்
செய்யும் செயலெல்லாம் கைகூட்டும்
அடாவடி தகராறு அக்கிரமம்
அனைத்தையும் விலைபேசும்!

மோகம் தேகமேறி வழிய
பித்தம் மூளைக்கேறி திரிய
அய்யோ அழித்தேனே சிறுமொட்டை!
அய்யோ அழித்தேனே மனிதத்தை!
அதோ கிடக்கிறது கத்தி! அரு அரு!
இதோ அழிகிறேன் நானும் க ழு த்..த..ரு...ந்.....து!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (25-Jul-14, 10:41 pm)
பார்வை : 181

மேலே