ஜனனம்
முழுதாய் பிறப்பாய்
அழுதே சிரிப்பாய்
விழுந்தே நடப்பாய்
திரிந்தே களிப்பாய்
நட்பில் உறைவாய்
பசலை அடைவாய்
பைத்தியம் கொள்வாய்
அறிவை விரிப்பாய்
தேடல் செய்வாய்
தேவை நிறைப்பாய்
தனிமை வெறுப்பாய்
துணையைச் சேர்வாய்
அகமாய் புணர்வாய்
உயிரை ஜனிப்பாய்
மழலை மகிழ்வாய்
அகவை இழப்பாய்
உலகை அறிவாய்
மாயை உணர்வாய்
முதுமை பெறுவாய்
முழுமை ஆவாய்
மனிதம் புரிவாய்
வரமாய் கிடைப்பாய்
மரணம் செய்வாய்