மதிவாணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மதிவாணன் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 07-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 14 |
அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
என் கால்சட்டைப் பைகளிலும்
உன் பாவாடை மடிகளிலும்
எத்தனை நாட்கள் - நாம்
நிறைத்திருப்போம்
ஞாபகங்களையும்
நெல்லிக்காய்களையும்
எரியாத பிளாஸ்டிக் அடுப்பில்
சின்னதாய் பாத்திரம் வைத்து
ஒற்றை பருக்கை
ஒரு துளி நீர் சேர்த்து
நீ ஆக்கிய சோறு-
இன்று வரை
என் பசியாற்றுகிறது
காலையில் ஆபிஸ் செல்வேன்
சிரித்துக்கொண்டே அனுப்பி வைப்பாய்
சமைத்துவிட்டு காத்திருப்பாய்
மாலையில் வீடு வருவேன்
மறுபடியும்
காலையில் ஆபிஸ்
இப்படி இரவுகளே இல்லாமல்
நாம் நடத்திய குடும்ப வாழ்க்கை
இனிப்பானது
பச்சக் குதிரை
விளையாடுகையில்
தெரியாமல் விழுந்து விட
முட்டியில் காயம்
அந்த காயத்தில் - நீ
தொட்டு வைத்த
எச்சில
வயல்கள்,
குளங்கள்,
ஏரிகள்,
வனங்கள்...
வேட்டையாடிய விலங்கின் மீது
காலூன்றி
நீண்ட துப்பாக்கியுடன்
புகைப்படம்
எடுத்துக்கொண்டவன் போல...
எழும்பி நிற்கின்றன
கட்டிடங்கள்..!”
என் கால்சட்டைப் பைகளிலும்
உன் பாவாடை மடிகளிலும்
எத்தனை நாட்கள் - நாம்
நிறைத்திருப்போம்
ஞாபகங்களையும்
நெல்லிக்காய்களையும்
எரியாத பிளாஸ்டிக் அடுப்பில்
சின்னதாய் பாத்திரம் வைத்து
ஒற்றை பருக்கை
ஒரு துளி நீர் சேர்த்து
நீ ஆக்கிய சோறு-
இன்று வரை
என் பசியாற்றுகிறது
காலையில் ஆபிஸ் செல்வேன்
சிரித்துக்கொண்டே அனுப்பி வைப்பாய்
சமைத்துவிட்டு காத்திருப்பாய்
மாலையில் வீடு வருவேன்
மறுபடியும்
காலையில் ஆபிஸ்
இப்படி இரவுகளே இல்லாமல்
நாம் நடத்திய குடும்ப வாழ்க்கை
இனிப்பானது
பச்சக் குதிரை
விளையாடுகையில்
தெரியாமல் விழுந்து விட
முட்டியில் காயம்
அந்த காயத்தில் - நீ
தொட்டு வைத்த
எச்சில
அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
முழுதாய் பிறப்பாய்
அழுதே சிரிப்பாய்
விழுந்தே நடப்பாய்
திரிந்தே களிப்பாய்
நட்பில் உறைவாய்
பசலை அடைவாய்
பைத்தியம் கொள்வாய்
அறிவை விரிப்பாய்
தேடல் செய்வாய்
தேவை நிறைப்பாய்
தனிமை வெறுப்பாய்
துணையைச் சேர்வாய்
அகமாய் புணர்வாய்
உயிரை ஜனிப்பாய்
மழலை மகிழ்வாய்
அகவை இழப்பாய்
உலகை அறிவாய்
மாயை உணர்வாய்
முதுமை பெறுவாய்
முழுமை ஆவாய்
மனிதம் புரிவாய்
வரமாய் கிடைப்பாய்
மரணம் செய்வாய்
வாருங்கள்
எனது அப்பாவைப் படிப்போம்.
அழகிய வாழ்க்கை.
செல்லமாய் எனது அப்பாவின்
கன்னம் கிள்ளி
செவியைத் திருகி
தலையில் குட்டி
அவரின் மனதில்
சிம்மாசனம் போட்டு
அமர்ந்திருப்பவன் நான்.
அப்பா...அப்பா...அப்பா...
சொல்லிப் பாருங்கள் நீங்களும்.
எனக்குள் சந்தோஷம்
நிரம்பி வழிகிறது.
தூவானத்துடன் கூடிய மழை நாள்.
அப்பாவின் கையில் தேநீர்.
அப்பாவின் மடி.
சங்கீதம்.
திருட்டுத்தனம்.
பொய்.
வீடெங்கும் அமைதி.
அப்பாவின் புன்சிரிப்பு.
விடுமுறை நாள்.
எனது களவு.
கண்டும் காணாமல்
அப்பாவின் செருமல்.
தொடுகை.
அரவணைப்பு.
விழிமொழி.
புன்சிரிப்பு.
புரியாத புதிர் அப்பா.
மெலிதான அதட்டல்.
அன்பே
நீ
என்னை பார்த்து
சிரித்த பொழுதெல்லாம் எனக்காய்
சிரித்தாய் என
நினைத்திருந்தேன்
இன்றல்லவா தெரிகிறது
காலம் முழுதும்
என்னை அழவைக்கவே
சிரித்தாய் என்று...!