விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

எழுதியவர் : அருண் (26-Jul-14, 4:13 pm)
சேர்த்தது : மதிவாணன்
Tanglish : vidhi
பார்வை : 109

மேலே