செய்யின் அசையாது நிற்கும் பழி - ஆசாரக் கோவை 73

நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி. 73 ஆசாரக் கோவை

பொருளுரை:

உரக்கச் சிரிப்பது, கொட்டாவி விடுவது, காறி உமிழ்வது, தும்முவது
ஆகிய செயல்களை அரசர் முன்பு விபரம் அறிந்த அறிவுடையார் செய்ய மாட்டார்.
அவ்வாறு செய்தால் அவர்மீது குறையாத பழி நிலைக்கும்.

கொட்டுதல் - விடுதல், இதனை ஆவி கொட்டு
என்பதன் இலக்கணப் போலியென்பர்.

பழி அசையாது நிற்கும் - பழிமாறாது நிலைக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-14, 10:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே