என்னருமை விண்மீனே

என்னருமை விண்மீனே,
நிலவில்லாத என் வானத்தில்,
நீ சின்னஞ்சிறு தேவதையாக,
நினைவிழந்து நின்னை இரசிக்கும்,
நான் மழலைக் கவியாக,
என்னை கண்டு தினமும்,
கண் சிமிட்டும் உன்னிடத்தில்,
என்ன வேண்டுமென கேட்பேன் ?
உன்னைத் தவிர நான் !