காதல் செய்யப் பழகு

காதல் செய்யப் பழகு.....
-----------------------------------------------


பூமிக்கு
நிலா
நமக்கு
“காதல்”


********************


சூரியனை மையமாக
வைத்து மட்டுமல்ல
காதலை மையமாக
வைத்தும் தான்
சுழல்கிறது பூமி.....


********************


இறக்கும் வரை
காதலி
இறந்தபின்னும்
சொர்கம் நிச்சயம்
உனக்கு.


********************


காதலை சுவாசித்து
காதலை வெளிவிடும்
எவருக்கும்
இருதய நோய்
வருவதில்லை.


********************


இதயத்தை
சுத்தப்படுத்தவாவது
ஒரு தேவதையை
அங்கு
குடியமர்த்து....


********************


தாகத்திற்கு மட்டும்
தண்ணீர் குடி
மற்ற நேரமெல்லாம்
காதலில் தவி.


********************


இதயவடிவில்
பூமி இருந்திருந்தால்
அதன் ஆயுள்காலம்
இன்னும் அதிகரித்திருக்கும்.


********************


காதலிக்கும் போது மட்டும்
குழந்தை மாதிரி
அடம்பிடி
முத்தங்கள் கிடைக்கலாம் !!


********************


அர்த்தமற்ற
வார்த்தைகளையும்
அழகாக்கும்
காதல்


********************


எப்பொழுதும்
தனியே செல்லாதே
உன்காதலியின் நினைவுடன்
கைக்கோர்த்துக்கொண்டே செல்


********************


நாத்திகனாய் கூட இரு
ஆனால்
காதலை மட்டும்
கும்பிடு.


********************


பூ, நிலா, தேவதை...
இப்படி
எப்பொழுதும்
உன் காதலியை வருணி
காதலில் மட்டுமே
பொய்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.


********************


பூமி
வானம்
நட்சத்திரம்
இவைகளை விட
அதிகம் ஆசைக்கொள்
காதலியிடம்.


********************


தவறு செய்துகொண்டே இரு
தண்டனையை மட்டும்
கேட்டு வாங்க
மறந்துவிடாதே.


********************


உன் தேவதையை
நினைத்துப் பார்பதை விட
அவளின் நினைவுகளில்
நீ இருப்பது
காதலுக்கு நல்லது.


********************


அவள்
உன்னருகில்
இல்லாத போது
அவள் நினைவுகளுடனும்
அவள் இருக்கும் போது
விழிகளுடனும்
போசிக்கொண்டே இரு.


********************


இலவசமாக கிடைக்கும்
எல்லாமுமே
விலைமதிப்பில்லாதது
காதலில்.


********************


புலன்களை
அடக்கிக்கொள்
காதலை மட்டும்
அடக்காதே


********************


நிலவேடு பேசவேண்டுமா
தென்றலோடு நடக்கவேண்டுமா
பூக்கலோடு உதிரவேண்டுமா
கண்டிப்பாக காதல் செய்.


********************


மழையில் நனைந்தால்
உன் தேவதையின்
தாவணி வாசம் கிடைக்கும்.


********************


தனிமையில் பேசி, சிரி
எல்லோரும்
பைத்தியம் என்று கூட சொல்லட்டும்
காதலில்
பைத்தியமாகவே இரு.


********************


அவள் இன்றி
தனிமையில் மூச்சிவிட
கடினமாக இருக்கிறதா
உன்னை
காதல் பிடித்துவிட்டது.


********************


பூமி சுழல்வதால்
இரவும் பகலும் வரலாம்
ஆனால்
நீ நினைத்தால் மட்டுமே
நிலா தோன்றவும், மறையவும் முடியும்
காதலில் விழு.


********************


பட்டாம் பூச்சிகளை
நீ விரட்டிப் பிடித்திருப்பாய்
காதலி...
பட்டாம் பூச்சிகள்
உன்னை விரட்டிப்பிடிக்கும்


********************


உன் காதலுக்கு முன்
இந்த பிரபஞ்சம்
சிறியதுதான்.
அளவில்லாமல் காதலி


********************


நீ
சோகத்தில் இருக்கும்பொழுதெல்லாம்
ஒரு
தேவதையால் மட்டுமே
உன் முகத்தில்
மகிழ்ச்சியை வரைய முடியும்
காதலி


********************


உன்
தேவதைக்காகவாவது
உன்னில் இருக்கும்
கம்பனைக்
கண்டுபிடி


********************


தூக்கத்தில் இருந்து
எழு
ஆனால்
கனவில் உன்
காதலியிருந்தால் - தயவுசெய்து
களைத்துவிடாதே


********************


உன்மையாக
காதல் செய்
உன்னுள்
இரண்டு இதயம்
முளைக்கும்


********************

எழுதியவர் : யுவராஐ் அரவன் (27-Jul-14, 8:25 am)
பார்வை : 226

மேலே