நானும் நண்பனும்
சமூக சேவை
சமூக மாற்றம்
இரண்டில் எது சாத்தியம் ?
என்பதெம் விவாதம் .
விவாதித்து விவாதித்து
விவாதித்து விவாதித்து
விவாதித்து ......
ஏதும் செய்ய வில்லை
இருபத்தைந்தாண்டுகளாய் .
இறுதியில் நிரூபித்தோம்
எங்கள் கருத்தினை !
"அன்னை தெரசா"
கவியெழுதினான் நண்பன்
"தந்தை பெரியார்"....
தலைப்பில் நான்.