ஈகை பெருநாள்

பசித்திருந்து ,விழித்திருந்து
மன இச்சையை மறந்து விட்டு

திருமறையை ஓதி தினம் நமது
முழு வணக்கம் இரவெல்லாம்

மறையோனை தொழுது நின்றோம்
மாண்போடு மனம் நிறைவாக

அல்லாஹுவின் அருள் வேண்டி
பர்லான நோன்பை நோற்று

திருமறை குரான் வந்திறங்கிய
புனித ரமழான் மாதமிது

மேன்மையான லைலதுல் கதிர் இரவு
இறுதி பத்து ஒற்றைப்படை நாட்களில்

இல்லாதோர் ,எளியோருக்கு நாம்
ஜக்காத்தை கொடுத்து வந்தோம்

எண்ணிகைபடி பித்ராவை நாம்
கண்ணியமாய் கொடுத்தும் விட்டோம்

மறையோனே !

எங்கள் நோன்பை ஏற்று
நற்கூலி பன்மடங்கு கொண்டு
உன் ரஹுமத்தை எமக்களிப்பாய்
ரஹுமானே ! யா அல்லாஹ் !!

கவிஞர்: மு .அ .காதர்

எழுதியவர் : கவிஞர்: மு .அ .காதர் (27-Jul-14, 11:26 pm)
பார்வை : 1177

மேலே