கடிதமல்ல இதுஇதயம்

அன்பே ...!
உன்
விழிப்பார்வைக்கு
என் இதயத்தையே
மடலாக்கியுள்ளேன் ....!

வாசிப்பாயென
யாசிப்போடு -
காத்திருக்கிறது
என் கண்களும்...காதலும் ....!

மடலில்
விளையாட்டும்
வார்த்தைக்குழந்தைகள்
சுமந்து வந்துள்ளது
இதயத்தையல்ல
என் சுவாசத்தை .....!

புன்னகைத்து
புறந்தள்ளினாலும் சரி..
விழிகளை உயர்த்தி
வில்லனாக மட்டும்
நினைத்து விடாதே..!

அன்பே
உன் வாசிப்பே போதுமெனக்கு....!

காதல் நந்தவனத்தில்
சேர்ந்து
மணக்கவில்லை என்றாலும்
உன் நினைவு
ரோஜாக்களையே
என்றும்
சுமந்து மணக்கும் என் கல்லறை ......!

எழுதியவர் : வெற்றிநாயகன் (27-Jul-14, 9:44 pm)
சேர்த்தது : மு முருக பூபதி
பார்வை : 76

மேலே