நோன்புப்பெருநாள் - சோகத்திருநாள்
பாலஸ்தின் மக்களை குழிதோண்டி
புதைக்கும் இன் நாளா எமக்கு பெருநாள் !
சின்னஞ்சிறு குழந்தைகளின் மண்ணறை கூட இன்னும்
மூடவில்லை .
கண்ணீர் அலைகள் இன்னும் ஓயவில்லை
கண்சிமிட்டும் நேரங்களில் ஆயிரம் ஆத்மாக்கள்
மண்ணுக்குள் தடம் பதிக்கும் இந்நிலமையில்,
இரத்தக் கரைகள் தீராத தீட்டாய் கண்முன் காட்சி அளிக்கும்
இத்தருணத்தில் எமக்கு ஆனந்த பெருநாளா ..???
ஒவ்வொரு இரவுகளும்
கண்ணீரோடு இறைவனிடம் இறைஞ்சியது ,
நோன்புத்தவத்தில் முழுமூச்சாய்
முஸ்லிம் மக்களுக்காய் பிரார்த்தித்தது ,
எல்லாம் இந்த சந்தோஷ மிகு
திரு நாளை கொண்டாடுவதற்கா ?
இரத்தக் கரைகள் படிந்த சுட்டாடை காணும்போது
புத்தாடை அணிய எப்படி எமக்கு மனம் காணும் .
சின்னஞ்சிருகுரல் அலறி அழும்போது
குடும்பக்குதூகலம் இனபப் பண்டிகை எப்படி முடியும் ?
ஒரு கட்டார் தேசம் மட்டும்தானா
சகோதரத்துவத்துக்கு முன்மாதிரி
எமக்கு மட்டும் மதவாடை மரத்துப்போயுள்ளதா ?
முஸ்லிம் நெஞ்சங்களே !
கொண்டாடுங்கள் நோன்புப் பெருநாளை பரவாயில்லை !
உள்ளத்தில் இஸ்லாமிய ஈரத்தோடு
அந்த துயரத்தில் இருக்கும் நெஞ்சங்களும்
நிம்மதியடைய வேண்டும் என்ற பாசத்தோடு .