சோழியம் கவிதை

*
ஆடிமாசம்
ஆத்தாளுக்குப்
பொங்கல் வை.
செவ்வாய், வெள்ளி
துர்க்கையம்மனுக்கு
எலுமிச்சை விளக்கேற்றி
வணங்கி வா...
பொன்னான
மாப்பிள்ளைப் பையன்
பொறுப்பா வந்து
கைப்பிடிப்பான் – என்று
சோழியை உருட்டி
சோசியம் கணித்து
அருள் வாக்கு சொன்னாள்
பாதையோரம்
கடைவிரித்திருந்தப்
பொன்னாத்தா கிழவி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (28-Jul-14, 11:07 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 54

மேலே