பரந்த மனப்பான்மை
கல்யாண ராத்திரி அன்று
கதவுகள் சாத்திய பின்பு ...
பேசலாமே என்றான்
ஆசைக் கணவன்.!
பிடித்த எழுத்தாளர் யார் ? கேட்டான்.!
பாலகுமாரன் என்றேன் .
அடடா என்றான்.!
அருமை என்றான்.!!
பாடகர் ?
பாலு.
இசை ?
ராஜா.
நடிப்பு ?
கமல்.
அரசியல் ?
லீக்வான் யூ.
அருமை அருமை !
பெருமை அடைகிறேன்.!!
கை குலுக்கினான்.
கேள்வி தொடர்ந்தான் .!
விளையாட்டு ?
கபில்தேவ் .
கவிதை ?
கண்ணதாசன்.
தொழில் ?
ரத்தன் டாடா.
தொகுப்பாளர் ?
பிரணாய் ராய்.
நட்பு ?
கூட படிச்ச கல்யாண் என்றேன் .
"ஓ....அப்படியா ???"
அப்படியே மௌனமானான்.
பாவம் ?!
இதற்கு மட்டும்
பெண்பெயரை
எதிர்பார்த்தான் போலும்.
"பரந்த மனத்தான்".