அவர்கள்

நீ நன்றாய் நடை பழகிட உன் கரம் பிடித்து,
அவர்கள் நடந்த தூரம் அதிகம்!
நீ நன்றாய் உணவு அருந்திட தம் பசி மறந்து,
அவர்கள் பட்டினி கிடந்த நாட்கள் அதிகம்!
நீ நன்றாய் உறங்கிட உன்னை தம் மடியில் சாய்த்து,
அவர்கள் தொலைத்த தூக்கம் அதிகம்!

உன் வெற்றியில் உன்னைவிட மகிழ்சியுற்றவர்களும்,
உன் தோல்வியில் உன்னைவிட வருத்தமுற்றவர்களும் அவர்கள்!
உன் நலனுக்காக தன்னலம் பாராது உழைத்த அவர்களுக்கு,
ஏழேழு ஜென்மத்திற்கும் நீ கடன்(மைப்)பட்டுள்ளாய்!

அவர்கள் : உன் தாய் தந்தையர்!

எழுதியவர் : தினேஷ் (28-Jul-14, 3:11 pm)
Tanglish : avargal
பார்வை : 73

மேலே