வாழ்க்கையை நேசிப்போம்

வாழ்க்கையை கோபிப்போர் பலர் இருக்கையில்
நேசிப்போர் சிலராவது இருக்கிறார்கள்
என்பதில் என் நெஞ்சு ஆறுதலடைகின்றது

வானவில் வர்ணங்கள் ஏழு
அதே போல் வாழ்க்கை வர்ணங்களால் ஆனது
வாழ்வின் வர்ணங்களும் ஏழு
வாழ்வின் சுவைகள் பல
இயற்கையின் சுவையும் ஆறு

கவலை ஏக்கம் இடர்பாடுகள் பல
வாழ்வில் வந்துவிடின் சோராதே
என் பெண் மானே
இடர்பாடுகளை தகர்த்து வெளியே வா

அழகிய உலகம் உன்னை அழகியாய்
காண்கிறது
அழகிய உலகம் உனது விடியலை
பார்க்கிறது
அழகிய உலகம் தடைகளை தாண்ட
அழைப்பு விடுக்கிறது

இன்னமும் கிடுகு வேலிக் கலாச்சாரம்
மாறவில்லை தான்
இருப்பினும் தடை கற்களை படிக்கற்களாய்
மாற்று உன் வாழ்வு உந்தன் கையில்
மறந்து விடாதே உன்னை நேசிப்போர்
பலர் உண்டு இப்புவியில்
உறவுகள் உனக்கு எதற்கு...............???

எழுதியவர் : புரந்தர (28-Jul-14, 5:49 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 113

மேலே