தலைவர்கள் தந்தது
வெள்ளிநிலா வான்மேலே விளையாடி
==வந்தாலோ வெளிச்சம் கொட்டும்
முள்ளிருக்கும் மரத்தின்மேல் முகையவிழ்க்கும்
==மலர்களிலே வாசம் முட்டும்
புள்ளினங்கள் இதழ்மலர்ந்து பூபாளம்
==பாடிவிட்டால் பொழுது எட்டும்
எள்ளெடுத்து பதப்படுத்தி பிழிந்தெடுத்தால்
==ஏற்றவகை எண்ணெய் சொட்டும்
கொள்ளையிடும் தலைவர்கள் வாக்குறுதி
==கொடுத்ததிலோ நட்டம் மட்டும்!
(வேற்றொலி வெண்டுறை)
*மெய்யன் நடராஜ்