வரம்

விலையில்லா பொருளென்று
தங்கங்கள் சரிந்திடல் வேண்டும்..
விலைமாது விடுதிகண்டு
சீதைகள் நிறைத்திடல் வேண்டும்...
ஆழியை அடைத்திடும் வாளி வேண்டும்..
வலியை துடைத்திடும் தோழி வேண்டும்..
மூளையை செதுக்கும் உளி வேண்டும்..
கண்ணீரைப் பதுக்கும் விழி வேண்டும்..
இரத்தம் வரா வாள் வேண்டும்..
நித்தம் மரத்தில் பிறக்கா தாள் வேண்டும்..
மண்வெட்டி எடுத்திடல் வேண்டும்..
மனஅழுக்கை வெட்டி எடுத்திடல் வேண்டும்....
கொலை செய்யா கோடாரி வேண்டும்..
அது கோபமரத்தை மட்டும் கொறித்திடல் வேண்டும்...
இனப்பிரிகை இல்லா பூமி இருந்திடல் வேண்டும்...
மதப்பிரிகை காணும் சாமி இறந்திடல் வேண்டும்...
மதயானைப் போல் வீரம் வேண்டும்..
நல்மனிதனாய் மாறவேண்டும்...
சாதிகள் இல்லா ஊர் ஈன்றிடல் வேண்டும்..
சமத்துவம் அங்கே பயின்றிடல் வேண்டும்..
உலக மொழியாய்,
ஒருமொழி மாறிடல் வேண்டும்..
தமிழ் ஒன்றே
பிறமொழி மாய்ந்திடல் வேண்டும்...
உலகு ஒரு கூடென வீழ்ந்திடல் வேண்டும்...
அதனுள் ஒன்றாய் கூடி வாழ்ந்திடல் வேண்டும்..
வானைத்தொடும் கரம் வேண்டும்..
அதற்கு நான் கேட்ட வரம் வேண்டும்..

எழுதியவர் : இராகுல்சாரதி (28-Jul-14, 10:53 pm)
சேர்த்தது : சாரதி
Tanglish : varam
பார்வை : 64

மேலே