வரம் தருவாயா…
உதிக்கும் கதிரவன்
கொதிக்கும் தன்மை
இழக்கவேண்டும்
வரம் தருவாயா…!
மழைத்துளிகள்
தீண்டினால் போதும்
பிரளயமாகக்கூடாது
வரம் தருவாயா…!
வீசும் தென்றல்
வீரயம் கொள்ளும்
புயலாகக்கூடாது
வரம் தருவாயா…!
உயிர்கள் கொல்லும்
போர்கள் என்றும்
உருவாகக்கூடாது
வரம் தருவாயா…!
உயிர்வாழ எல்லா
உயிருக்கும்
உணவு வேண்டும்
வரம் தருவாயா…!
மனிதனுக்குள்
அன்பு ஒன்றே
இயங்கவேண்டும்
வரம் தருவாயா…!
வரம்தர மறுத்த கடவுளை
எண்ணி வருத்தப்படவா…!
இவை அனைத்துக்கும்
காரணம் மனிதனே
என்றெண்ணி கவலைப்படவா…!