பாட்டி சொன்ன கவிதை
கதை சொல்லும் பாட்டி
உனக்கு
கவிதை சொல்ல வராதா
என்றாள் பேத்தி !
அடி பெண்ணே !
தாயும் மகளும்
நான் படைத்த
கவிதைகள் தானேடி
பேத்தி
என்றாள் பாட்டி !
அசத்திட்ட பாட்டி
என்றாள் பேத்தி !
எழுத்தில்
கவிதையில் பதியவா
பாட்டி சொன்ன கதையில் பதியவா
என்று யோசிக்கிறாள் பேத்தி !
----கவின் சாரலன்