பிரார்த்தனைகள்
14-06-14:
கர்த்தரின் வார்த்தைகள் கொள்வேன்;
=கட்டிடுவேன் மனமான வீட்டை!
கர்த்தர் துணையென நிற்பார்;
=கட்டி அதை,அவர் காப்பார்!
கர்த்தர் வீட்டுனுள் இருந்து,
=கட்டளை வர,வரக் கேட்பேன்!
கர்த்தர்ன் சொற்களைக் கொண்டே
=காரியம் யாவிலும் வெல்வேன்!
வேதம் அவரின் வாக்கு!
=வேதம் அவரின் போக்கு!
வேதம் அதனைக் கேட்டு,
=வேதனை உன்னுள் நீக்கு!
வேதம் வாக்கென் றாக்கு!
=வீண்சொற் களை,நீ நீக்கு!
வேதம் செயலென் றாக்கு!
=வேதமே பாது காப்பு!
==== =========++ ========= ++ ==========
18-07-14
பக்தியுடன் உம்வார்த்தை படித்து நிற்பேன்!
பத்தியிலே அதை,நிறுத்த மாட்டேன்! வந்து
சுத்தமுள்ள மனிதனென ஆக்கு வீரோ?
சித்தம்,உமது அதுவாகச் செய்து தாரீர்!
25-07-14
என்னை நோக்கிச் செபித்த செபத்தின்
=எல்லையை விரிக்க வாரும்!
என்னைப் பார்த்துத் துக்கப் படுவோர்
=இதயத்தை ஆற்றிப் போடும்!
தன்னைக் கொடுத்தே ரசிக்கும் வாழ்வின்
=தரத்தை உயர்த்திக் காட்டும்!
இன்னும், இன்னும் எனும்,என் தேவைகள்
=என்னுள் ஒடுங்கப் பாரும்!
==== ++ ===== +++ ========