வயல்
![](https://eluthu.com/images/loading.gif)
வயல் என்ற பெயர் கொண்ட கருப்பையே
உன்தன் கருப்பையில் பயிர்கள் சிலகாலம்
மானிட வயிற்றில் சில மணி நேரம்
மீண்டும் பிரபஞ்ச இயக்கத்தில் பல காலம்
தென்றல் பண் பாடும் கலைக்கூடம்
மோடத்தைப் போற்றும் உறு பள்ளம்
பகைவன் என்ற களைக்கும் அருள் பள்ளம்
நச்சு தன்னை தாங்கும் அரவுக்கும் உறை பள்ளம்
கலப்பையின் அகழ்வு தன்னில் சிரிக்கும்
செம்ப் பொற்கொடிப் பெண்ணே
அகப்பையிலும் நிறைவு பெறும்
ஊண் தன்னைத் தந்திடும் மண்ணே
வேளாளன் என்ற உன் மைந்தனுக்கு
அவன் நட்டதை உள்வாங்கி உள்ளடக்கி
பெருவாரி மகசூல் தந்திடும் அட்சயபாத்திரமே
உன் தகவு சொல்ல எனக்குத் தகைமை உண்டோ