பொறாமைப்படுகிறேன்
உன் ஆடைகள் மீது பொறாமைப்படுகிறேன்
அது எப்போதும் உன்னை தவழ்ந்து கொண்டிருக்கிறது
உன் மோதிரத்தின் மீது பொறாமைப்படுகிறேன்
அது உன்னை பற்றிக் கொண்டிருக்கிறது
உன் மாலைகள் மீது பொறாமைப்படுகிறேன்
அது உன் தனங்களின் மீது நர்த்தனம் ஆடுகின்றது
உன் காதின் குழைகள் மீது பொறாமைப்படுகிறேன்
அது உன் உள் ஓசையை உணர்ந்து கொண்டிருக்கிறது
உன் நாசிக்காற்றின் மீது பொறாமைப்படுகிறேன்
அது உன் நெஞ்சை தொட்டுச் செல்கின்றது
உன் ஒட்டியானம் மீது பொறாமைப்படுகிறேன்
அது உன்னைக் கவ்விக் கொண்டிருக்கிறது
உன் கால் கொலுசுகள் மீது பொறாமைப்படுகிறேன்
அது உன்னையே அளந்து கொண்டிருக்கிறது
அஃறிணைக்கு இவ்வளவு காதலா?