மனைவிக்கு காதலிக்கு பிறந்தநாள் கவிதை

மனைவிக்கு (காதலிக்கு ) பிறந்தநாள் கவிதை
----------------------------------------------------
எனக்காக பிறந்தவள்
இன்னும் ஒரு சில
மணிகளில்
பிறக்கப்போகிறாள்....!!!

கருவறையில்
கருணையோடு பிறந்தவள் ....
கல்லறைவரையும்..
காதலோடு வாழ்பவள்
இன்னும் சில மணிகளில்
பிறக்கபோகிறாள்....!!!

காதலுக்கு
கருணை பாசம் அன்பு
இருந்தால் போதும்
என்பதை எனக்கு எப்பவுமே
கற்று தந்துகொண்டிருக்கும்
என் உயிர் தெய்வம் இன்னும்
சில நிமிடங்களில்
பிறக்க போகிறாள் ....!!!

உனக்காக
உயிரை தரமாட்டேன் நீ
தான் என் உயிர் உனக்கு
உயிரை தந்தால் நீயும்
இறந்து விடுவாய்
எனக்கு முன் நீ
இறக்க கூடாது 000
உனக்கு முன் நான்
இறக்க கூடாது
எமக்கு தினந்தோரும்
பிறந்த நாள் தான்
இதய தேவதையே ...!!!

எழுதியவர் : கே இனியவன் (29-Jul-14, 3:09 pm)
பார்வை : 171

மேலே